வனப்பகுதியில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை

X
தமிழக வனத்துறையின் சார்பில் வனச்சரகங்கள் தோறும் பிளாஸ்டிக் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக நீர்நிலைகள் மற்றும் பறவைகள் சரணாலய ங்களை சுற்றி இருக்கக்கூடிய பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணைப்பகுதி யில் வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் இணைந்து சாலையோரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், மது பாட்டில்களை சேகரித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. சாலையோரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் அமர்ந்து மது அருந்துவதோ, பிளாஸ்டிக் பொருட்களை கள் பாட்டில்களை வீசிச் செல்லவோ கூடாது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
Next Story

