மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

X
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராம காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது.தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story

