உச்ச நீதிமன்ற நீதிபதி குடும்பத்துடன் சாமி தரிசனம்

X
கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி சூரிய காந்த் தனது குடும்பத்தினருடன் வந்தார். அவருக்கு குமரி மாவட்ட நீதிபதி கார்த்திகேயன், ஆர்டிஓ காளீஸ்வரி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து பகவதி அம்மன் கோயிலுக்கு சென்ற நீதிபதி சூரியகாந்துக்கு கோயில் மேலாளர் ஆனந்த் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது பின்னர் தனது குடும் பத்தினருடன் சாமி தரிச னம் செய்தார். தொடர்ந்து சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். உச்சநீதிமன்ற நீதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Next Story

