பெண்ணிடம் நகை பறிப்பு போலீசார் விசாரணை

பெண்ணிடம்  நகை பறிப்பு  போலீசார் விசாரணை
X
மார்த்தாண்டம்
விளவங்கோடு அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி மனைவி விஷ்குமாரி (59). நேற்று இவர் மார்த்தாண்டம் அருகே வெட்டுணியில் உள்ள குருசடியில் நடந்த திருப்பதியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் திருப்பலி முடித்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நடந்து வந்தார். அப்போது விஷ்குமாரி கழுத்தில் அணிந்திருந்த ஆறரைப்பவுன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பஸ் நிறுத்த பகுதி முழுவதும் தேடி நகை கிடைக்கவில்லை. மேலும் குருசடிக்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விஷ்குமாரி நகை அணிந்து இருப்பதைக் கண்ட மர்ம நபர் திருப்பலியின் போது நகையை பறித்தாரா? அல்லது பஸ் ஏற நடந்து வரும் வழியில் நகை பறிக்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story