ஜேசிபி எந்திரம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

ஜேசிபி எந்திரம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
X
காட்டூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஜேசிபி மீது மோதி விபத்து
திருவாரூர் மடப்புரதை சோ்ந்த கணேசமூா்த்தி அவரது நண்பர்கள் துளசி,ஜெகன்,சஞ்சய், புஷ்பராஜ்,கோவிந்தராஜ், மணிகண்டன்,பாரதி ஆகியோா் காரில் குடவாசலுக்கு சனிக்கிழமை சென்றனா்.பின்னா் இரவு வீடுகளுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனா்.திருவாரூரைச் சோ்ந்த ஹரிஹரன் காரை ஓட்டிவந்தாா்.காட்டூா் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ஜேசிபி இயந்திரத்தின் மீது மோதிவிபத்துக்குள்ளானதில் கணேசமூர்த்தி உயிரிழந்தார். அவடியாக வந்தோர் விபத்தில் சிக்கியவர்களை நீட்டு உயிர் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து திருவாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story