மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா பதவியேற்பு

மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா பதவியேற்பு
X
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா பொறுப்பேற்றுக்கொண்டார். இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை துவங்குள்ளதால் முன்னேற்பாடு பணிகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டி
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா பொறுப்பேற்றுக்கொண்டார். இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை துவங்குள்ளதால் முன்னேற்பாடு பணிகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டி தூத்துக்குடி மாநகராட்சியின் 17 வது மாநகராட்சி ஆணையராக எஸ். பிரியங்கா இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சியின் நகர் நல அலுவலர், மாநகராட்சி பொறியாளர், துணை ஆணையர் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து தனது அலுவலகத்தில் வைத்து ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.‌ பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசும்போது இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை வர உள்ளதால் வெள்ள தடுப்பு பணிகளை துரிதப்படுத்துவேன். குப்பைதான் ஒரு பிரச்னையாக உள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இது சம்பந்தமாக மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். என்றார் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி அழகு படுத்தப்படும். மாநகராட்சிக்கு என்ன தேவையோ, மக்களுக்கு என்ன தேவையோ அதனை அறிந்து நிறைவேற்றுவேன் என்றார். மேலும், இவர் ஏற்கனவே திருவாரூரில் கூடுதல் ஆட்சியராகவும், பொள்ளாச்சியில் உதவி ஆட்சியராகவும் இருந்து வந்துள்ளது குறிப்பிடதக்கது.
Next Story