மாற்றுத்திறனாளிக்கு வேலை கேட்டு ஆட்சியரிடம் தந்தை புகார்.

மாற்றுத்திறனாளிக்கு வேலை கேட்டு ஆட்சியரிடம் தந்தை புகார்.
மாற்றுத்திறனாளிக்கு வேலை கேட்டு ஆட்சியரிடம் தந்தை புகார். கரூர் மாவட்டம் குளித்தலை நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரகாஷ் வயது 33 70% பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. அரசு பள்ளியில் வேலை கேட்டு பல வருடங்களாக மனு கொடுத்தும் அவருக்கு இதுவரை வேலை வழங்கவில்லை. குளித்தலை எம்எல்ஏ இவருக்கு வேலை வழங்க கோரி சிபாரிசு கடிதம் அளித்தும் கூட வேலை வழங்காததால் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாராந்திர குறைதீர் கூட்டத்தில் தனது மகனுக்கு அரசு பள்ளியில் காலியாக உள்ள இடத்தில் வேலை வழங்குமாறு கேட்டு மனு அளித்தார். இது தொடர்பாக செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது 2012 ஆம் ஆண்டிலிருந்து தனது மகனுக்கு வேலை கேட்டு மனு அளித்து வருகிறேன் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
Next Story