கோவை அருகே ரயில் மீது கல்லெறிந்த சிறுவன் கைது !

X
கோவை போதனூர்–இருகூர் இடையே சென்ற சரக்கு ரெயிலின் இயந்திர கண்ணாடி மீது சிறுவன் கல்லெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு, சிங்காநல்லூரைச் சேர்ந்த 15 வயது சிறுவனே சம்பவத்துக்கு காரணம் என கண்டறிந்து 24 மணி நேரத்துக்குள் கைது செய்தனர். பின்னர் அவர் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சைல்ட் வெல்ஃபேர் கமிட்டி இடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுவனுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் மற்றும் கல்வியைத் தொடரும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Next Story

