கோவையில் ஓணம் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம் !
ஓணம் பண்டிகையை ஒட்டி கோவையில் வசிக்கும் மலையாள மக்கள், சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், அத்தப்பூ கோலம் போட்டு, நடனமாடி மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடினர். கேரளாவில் வழக்கம் போல் பத்து நாட்களுக்கு முன்பே தொடங்கும் ஓணம் கொண்டாட்டம், கேரளத்தை ஒட்டி உள்ள கோவை நகரிலும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதன் பகுதியாக, மலையாளம் பேசும் மக்கள் புத்தாடை அணிந்து, குடும்பத்தாருடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் மதிய உணவாக பாரம்பரியமான “ஓணம் சதயா” விருந்து வழங்கப்பட்டது. இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் சண்டை மேளம் முழங்க நடனமாடி, இசை மற்றும் பாடல்களில் கலந்து கொண்டு, ஓணம் பண்டிகையை வண்ணமயமாக கொண்டாடினர்.
Next Story




