பள்ளி மாணவிக்கு காது கருவி வாங்கிய ஆட்சியர்

பள்ளி மாணவிக்கு காது கருவி வாங்கிய ஆட்சியர்
X
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளி மாணவிக்கு காதலிக்கருவிய பத்தே நிமிடத்தில் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்டம் காதொலி கருவி வேண்டி மனு கொடுத்த மாணவிக்கு பத்தே நிமிடத்தில் காதொலி கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (01.09.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது காதொலி கருவி வேண்டி மனு கொடுத்த திருவாளந்துறை ராம்ஜி நகரைச் சேர்ந்த சசிரா த/பெ.ரமேஷ் என்ற மாணவி மனு அளித்தார். அம்மனுமீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில் அம்மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு மனு கொடுத்த பத்தே நிமிடத்தில் காதொலி கருவியினை மாணவிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் காதொலி கருவி பொருத்தப்பட்ட மாணவியிடம் தற்போது சரியாக காது கேட்கிறதா என்று கேட்டறிந்து, கருவி பயன்படுத்துவது குறித்து மாணவிக்கு தெளிவாக எடுத்துக் கூற மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
Next Story