சூலூரில் விமானப்படை முன்னாள் வீரர்கள் – கேரள சமூகத்தினர் இணைந்து ஓணம் கொண்டாட்டம் !

கோவை மாவட்டம் சூலூரில் காங்கேயம்பாளையம் விமானப்படை தள முன்னாள் வீரர்களும், கேரள சமூகத்தினரும் இணைந்து ஓணம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினர்.
கோவை மாவட்டம் சூலூரில் காங்கேயம்பாளையம் விமானப்படை தள முன்னாள் வீரர்களும், கேரள சமூகத்தினரும் இணைந்து ஓணம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினர். சூலூரிலுள்ள திருமண மண்டபத்தில் கேரள கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், திருவாதிரைக்களி, மோகினியாட்டம் உள்ளிட்ட கேரள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. 80களின் பாணியில் பெண்களின் நடனமும், செண்டை மேளத்துடன் கூடிய மக்கள் ஆட்டமும் உற்சாகத்தை ஏற்படுத்தின. விழா நிறைவில் பாரம்பரிய ஓணம் சத்யா விருந்து வழங்கப்பட்டு, கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கேரள கிளப் தலைவர் மார்க்கெட் ஜான்சன், முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி, எம்.எல்.ஏ வி.பி. கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு முன்னாள் விமானப்படை வீரர்களும், கேரள சமூகத்தினரும் இடையேயான நட்பு, ஒற்றுமையை வெளிப்படுத்தியது.
Next Story