திருப்பூரில் முன்னாள் எம். எல். ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு மொரட்டுபாளையம் பகுதி பொதுமக்கள் நன்றி அறிவிப்பு மற்றும் பாராட்டு விழா!
திருப்பூரில் குப்பை கொட்டும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு செய்து கொடுத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மாநகரப் பகுதிகளிலிருந்து பெறக்கூடிய குப்பைகளை திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள செயல்படாத பாறைக்குழியில் கொட்டி பாறைக்குழிகளை மூடி வருகிறது இந்நிலையில் ஊத்துக்குளி சாலை அருகே உள்ள மொரட்டு பாளையம் அ.பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள பாறை குழியில் கொட்டுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததை தடுக்கும் இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பொதுமக்கள் ஊத்துக்குளி ரோடு சாலை மறியலில் ஈடுபட்டனர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர் மேலும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உறுதுணையாக இருந்த திமுக ஈரோடு மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோருக்கு தொட்டிய வலசு ஊரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு பாராட்டு தெரிவிக்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாட்டினை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு ஏற்பாடு செய்திருந்தார்.ஒன்றிய கழக செயலாளர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலையில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது திருப்பூர் மாநகராட்சி குப்பையினை திருப்பூரிலேயே தரம் பிரித்து மற்ற ஊருக்கு குப்பையை கொண்டு வர வேண்டாம் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது...
Next Story




