ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர்

X
தூத்துக்குடியில் 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட பல்வேறு பகுதியை சார்ந்தவர்களுக்கு சீருடைகளை அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டங்களையும் எல்லா பகுதி மக்களிடமும் எடுத்துக்கூறுங்கள். தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருப்பது அதிமுக மட்டும் தான் அதிகாரத்திற்கு வந்த பிறகு இன்னும் கூடுதலாக பல நன்மைகளை செய்து கொடுக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றார். நிகழ்ச்சியில் மகளிர் அணி துணை அமைப்பாளர் சண்முகத்தாய், வட்டப்பிரதிநிதி ஐயப்பன், சங்கர், கனிராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

