மணல் திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

X
தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை பகுதியில் தமிழக அரசின் பொதுப்பணி துறைக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது இந்த குளத்தில் விவசாய தேவைக்கு பயன்படுத்த மணல் அல்ல அனுமதி என்ற பெயரில் ஆளும் கட்சியினர் துணையுடன் சிலர் உரிமம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முறையாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பயன்படுத்தாமல் விவசாய தேவைக்கு பயன்படுத்தாமல் ராட்சத டாரஸ் லாரிகள் மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாகவும், பல அடி ஆழத்திற்கு மணல் அள்ளுவதால் அந்த பகுதியில் உயிர் பலி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட்டு மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
Next Story

