பைக் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு.. அதிவேகமாக கிரஷர் லாரிகளை சாலைகளில் இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு...*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு.. அதிவேகமாக கிரஷர் லாரிகளை சாலைகளில் இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் வயது (58) என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மனைவி சீனியம்மாள் வயது (65) இருவரும் மயதேவன்பட்டியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்வதற்காக மயத்தேவன்பட்டி சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவர்களுக்கு பின்னால் சாய்ராம் கிரசரில் எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி சக்திவேல் ஓட்டி வந்த இருச்சக்கர வாகனத்தில் மீது மோதியது லாரியின் பின் சக்கரத்தில் விழுந்த இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து சம்பவம் அறிந்து வந்த மல்லி காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து லாரியை ஓட்டி வந்த முத்துவைரம் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த மாயத்தேவன்பட்டி சாலையில் சாய்ராம் கிரஷரில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்வதாகவும் இதனால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதாவும் பொது மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு அதிவேகமாக வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

