தனியார் நிறுவனம் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை மனு ....*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீவாநகர், இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் தனியார் நிறுவனம் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை மனு .... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாக்கு உட்பட்ட ஜீவா நகர், இந்திநகர் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் ஏற்கனவே எங்கள் பகுதியில் தனியார் டவர் இருப்பதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சிலிருந்து பெரியோர்களும் சிறியவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் தாங்கள் வசிக்கும் பகுதியில் வேறொரு தனியார் நிறுவனம் டவர் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக தங்களுக்கு தகவல் வந்ததை அடுத்து உடனடியாக தங்கள் பகுதியில் டவர் அமைக்க மாவட்ட நிரவாகம் அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் அனுமதி அளித்தால் தங்கள் பகுதியில் உள்ள பெரியவர்களும், குழந்தைகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்து, இன்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்
Next Story

