பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் ‘வீலிங்' செய்தவர்களுக்கு அபராதம்

X
Paramathi Velur King 24x7 |1 Sept 2025 5:37 PM ISTபபரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் ‘வீலிங்' செய்தவர்களுக்கு அபராதம் விதிப்பு.
பரமத்திவேலூர், செப்.1- பரமத்திவேலூர் பஸ் நிலையத்திற்குள் கடந்த 24-ந் தேதி 5-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்களது மோட்டார் சைக் கிள்களில் ‘வீலிங்' சாகசத்தில் ஈடுபட்டனர்.இதனால் பஸ் நிலையத்திற்குள் காத்திருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரமத்திவேலூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விசாரணை நடத்தி குச்சிபாளையத்தை சேர்ந்த தனுஷ் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த பாலமுரு கன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்து மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மதுபோதையில் இருந்தது, "ஹெல்மெட் ஹெல்மெட் அணியாதது, வண்டிக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியது என பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேருக்கும் தலா ரூ.39 ஆயிரம் அபராதம் விதிக்க வேலூர் போலீசார் பரமத்தி வட்டா போக்குவரத்து ஆய்வாளருக்கு பரிந்துரை செய்துள்ளனர். மேலும் பரமத்திவேலூர் பகுதிகளில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் எனவும், மீறி சாகசத்தில் ஈடுபட்டால் அதிகபட்ச அளவில் அபராதம் விதிக்கப்படும் என சப்இன்ஸ்பெக்டர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
