காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

X
Paramathi Velur King 24x7 |1 Sept 2025 5:45 PM ISTவேலூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைத்தனர்.
பரமத்திவேலூர், செப்.1- பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் புஷ்பராஜ் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகள் கிருபாவும் (25) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரியவந்ததால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கிருபாவிற்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடும் பணியில் அவரது பெற்றோர், உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இதனையடுத்து காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டுவெளியேறி பரமத்திவேலூர் அருகே படமுடிபாளையத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்புகேட்டு தஞ்சமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த இருதரப்பு பெற்றோரையும் இன்ஸ்பெக்டர் இந்திராணி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கிருபாவை அவரது காதல் கணவர் புஷ்பராஜ் உடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
Next Story
