வாசுதேவநல்லூர் அருகே பூலித்தேவன் திருவுருவ சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

வாசுதேவநல்லூர் அருகே  பூலித்தேவன் திருவுருவ சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
X
பூலித்தேவன் திருவுருவ சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்திற்கு மாமன்னர் பூலித்தேவரின் 310 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் பொழுது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணை வேண்டும் அப்பொழுதுதான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என சின்னம்மா கூரிய கருத்தை வரவேற்பதாகவும், பிரிந்து கிடக்கும் சக்தியை ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறேன் அனைத்து தொகுதிகளுக்கும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகழ்பாடும் தொண்டனாக வருவேன் முதலமைச்சரின் வெளிநாடு சுற்றுப்பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். டிஜிபி பதவி சீனியாரிட்டி அடிப்படையில் போடுவதுதான் மரபு, விஜயுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அவர் பேசினார்......
Next Story