பூலித்தேவர் திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் புகழாரம்

பூலித்தேவர் திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் புகழாரம்
X
பூலித்தேவர் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள மாமன்னர் பூலித்தேவர் நினைவு மாளிகையில் இன்று அவரது 310-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான வழக்கறிஞர் ராஜா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ராணி ஸ்ரீகுமார், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.எஸ்‌.ஆர்.ராமச்சந்திரன் சுதந்திரப் போராட்டத்தை துவங்கி வைத்தது மாவீரன் பூலித்தேவர் என்றும், நாட்டிற்கு அடிப்படையில் இருந்து அவர் செய்த தியாகங்கள் மூலம் போராடிய உழைப்பால் தான் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்றும், அதை நாம் இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் எனவும் அவர்களை சார்ந்து இருக்கிற குடும்பத்தினருக்கு நன்றி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கும், எங்களுக்கும் இருக்கிறது எனவும், தியாகிகளை போற்றக்கூடிய முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் எனவும், கலைஞர் வழியில் இருந்தே அரசர் காலத்தில் இருந்த தியாகிகளுக்கும் நிகழ்காலத்தில் உள்ள தியாகிகளாக இருந்தாலும் சரி அவர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் விளங்குகிறார் என தெரிவித்தார்..
Next Story