தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க.வினர்

Paramathi Velur King 24x7 |1 Sept 2025 6:00 PM ISTகபிலர்மலை ஒன்றிய பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் தி.மு.க. பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
பரமத்திவேலூர், செப்.1: நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வடகரையாத்தூர் ஊராட்சி காளிபாளையம் பகுதியை சேர்ந்த அ.தி. மு.க. கிளை செயலாளர் குழந்தைவேல் மற்றும் ஏராளமான அ.திமு.க.வினர் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு கே.எஸ். மூர்த்தி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அப்போது கபிலர்மலை ஒன்றிய மத்திய பொறுப்பாளர் வக்கீல் சரவணக்குமார்,கபிலர்மலை திமுக பொருளாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், திமுக பிரமுகர்கள் கோபிநாத்,கார்த்தி, வடகரை ஆத்தூர் கிளை செயலாளர் உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story
