மூதாட்டி தற்கொலை போலீசார் விசாரணை

மூதாட்டி தற்கொலை போலீசார் விசாரணை
X
குமாரபாளையத்தில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் காளியண்ணன் நகரில் வசிப்பவர் கலையரசி, 55. மான அழுத்தம், ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இவரது கணவர் வேலுச்சாமி, 58, வெப்படை மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் வேலை முடிந்து, இரவு 09:45 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் தாழ்வாரத்தில் சேலையால் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்தார். அருகே இருந்த உறவினர்கள் உதவியுடன் அவரை கீழே இறக்கி, போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பெருந்துறை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இது குமாரபாளையம் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story