இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்
X
குமாரபாளையம் சட்டப் பணிகள் ஆணைக்குழு தன்னார்வர்கள் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது
குமாரபாளையம் சட்டப் பணிகள் ஆணைக்குழு தன்னார்வர்கள் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமிற்கு பிரகாஷ் தலைமை வகித்தார். அரசன் கண் மருத்துவமனை மருத்துவர் குழுவினர் கண் பரிசோதனை செய்தார், முகாமில் 112 பேர் பங்கு பெற்றனர். இதில் 14 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 11 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. முகாமில் பங்கு பெற்றவர்களுக்கு கண்ணில் புரை, உண்டாகுதல் மாறுகண், நீர் அழுத்த நோய், கிட்ட பார்வை, மற்றும் தூரப்பார்வை இலவசமாக பார்க்கப்பட்டது, முகாமில் தனபால் , சண்முக சுந்தரம், நாகராஜ், மாதேஸ்வரன், மாதுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story