கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி

X
மதுரை மாவட்டம் பேரையூர் சாப்டூரில வசிக்கும் சுந்தர தேவரின் மகன் சக்திவேல்(70) என்பவர் கடந்த நேற்று முன்தினம்( ஆக.30) மதியம் 1 மணியளவில் அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் குடிப்பதற்காக இறங்கிய பொழுது எதிர்பாராத விதமாக விழுந்ததில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

