தமிழக அரசு தட்டச்சு தேர்வு

தமிழக அரசு தட்டச்சு தேர்வு
X
குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் அரசு தட்டச்சு தேர்வு நடந்தது.
குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் அரசு தட்டச்சு தேர்வு இரண்டு நாட்கள் நடந்தது. இந்தத் தேர்வுக்கு:முதன்மை கண்காணிப்பாளராக: ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விஜயகுமார், துணை கண்காணிப்பாளராக: எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியை முத்து வேலம்மையார் ஆகியோர் பணியாற்றினர். இந்த தேர்வில் 38 தட்டச்சு பயிலகங்கள் மூலம் மாணவர்கள் பங்கேற்றனர். இளநிலை ஆங்கிலம் 732, இளநிலை தமிழ் 280, முதுநிலை ஆங்கிலம்: 290, முதுநிலை தமிழ் 189, முன் இளநிலை ஆங்கிலம் 11, முன் இளநிலை தமிழ் 1,அதிவேக தட்டச்சு தமிழ் 1, மொத்தம் ஆயிரத்து 504 தேர்வர்கள். இந்தத் தேர்வில் குமாரபாளையம், பவானி, சங்ககிரி, எடப்பாடி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்,
Next Story