ஆயக்குடி கூட்டுறவு சங்க மேலாளர் மீது நடவடிக்கை கோரி மனு

X
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா ஆயக்குடியில் செயல்பட்டு வரும் டிடி 525 புது ஆயக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் மானிய கடன் நகை கடன் உள்ளிட்ட அரசின் திட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சங்கத்தில் செயலாளராக பணிபுரியும் பாலமுருகன் தன்னிச்சையாக தன் உறவினர்களுக்கு மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே கடன்களை வாரி வழங்குகிறார். சாதாரண ஏழை விவசாயிகள் கடன் கேட்டு சென்றால் பலமுறை அலைக்கழித்தும், வேண்டிய ஆதாரங்கள் இல்லை என கூறி கடன் வழங்க மறுத்து வருகிறார். இதனால் அரசின் திட்டங்களான விவசாய கடன் பெரிதளவும் பாதிக்கப்படுகிறது. விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தன்னிச்சையாக செயல்படும் கூட்டுறவு வங்கி செயலர் பாலமுருகன் மீது துணை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
Next Story

