ஆசிரியர்கள் ஏற்பாட்டில், ஆட்டோ மூலம் பள்ளிக்கு வந்து, செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள்

X
- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி, அம்பாள்புரத்தில் அரசால் கட்டித் தரப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகள் மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) ச.இளமதியன் மற்றும் ஆசிரியர்கள் இதற்கான முயற்சி மேற்கொண்டனர். அதே, கிராமத்தைச் சேர்ந்த அ.காளிதாஸ் என்பவர் தனக்கு சொந்தமான ஆட்டோ மூலம் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்கு வந்த மாணவர்கள், பள்ளி முடிந்து, இன்று ஆட்டோ மூலம் 2 கி.மீ தொலைவில் உள்ள அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆட்டோவில் வந்து செல்வதால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆட்டோவுக்கான நிர்வாக, நிதிச்செலவுகளை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஏற்றுக் கொண்டுள்ளனர். நிகழ்வில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரா.முத்துகிருஷ்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கா.சத்யா, மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
Next Story

