மது போதையில் வந்த இளைஞர் சாலையில் நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது மோதி விபத்து

மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிர் பரிபோனது உறவினர்கள் அரசு மருத்துவமனை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அதிகர்களுக்கு எச்சரிக்கை
பெரம்பலூர் அருகே துறையூர் சாலை, செஞ்சேரி பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது இருசக்கர வாகனதில் மதுபோதையில் வந்த ஆசாமி மோதியதில், சிகிச்சை பலன் இன்றி மூதாட்டி உயிரிழப்பு, அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் - மனைவி பானுமதி - 65, விவசாய தொழில் செய்து வரும், இவருக்கு, மூன்று பெண், இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர், கணவர் விஜயகுமார் உயிரிழந்த நிலையில் செஞ்சேரியில் மகனுடன் வீட்டில் பானுமதி வசித்து வந்துள்ளார் இந்நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் மாடுகளுக்கு தீவனம் போட்டுவிட்டு, பெரம்பலூர் துறையூர் சாலை ஓரம் வீட்டிற்கு செல்ல நின்று கொண்டு இருந்தார் அப்போது, பெரம்பலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வந்த துறைமங்கலம் பங்களா ஸ்டாப் பகுதியைச் சேர்ந்த மகாதேவன் 26, என்பவர், நிலை தடுமாறி சாலையோரம் நின்றிருந்த பானுமதி மீது அதி வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பானுமதி மயங்கி விழுந்தார் இதில் தலை மற்றும் உடல், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அருகே இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் அங்கு போதுமான மருத்துவர்கள் அந்த நேரத்தில் இல்லாததால் மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது வெகு நேரமாகியும் தலைமை மருத்துவர் வராததால் அவருக்கு வாட்ஸ் அப் மூலமாக ரிப்போர்ட் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது, இதில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கடந்துள்ள நிலையில், தாமதமாக வந்த பணி மருத்துவர் மூதாட்டியை பரிசோதித்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த பானுமதி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, இதனைத் தொடர்ந்து செஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மருத்துவமனைக்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த பானுமதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் இருசக்கர வாகனத்தில் போதையில் வந்த மகாதேவன் அதே மருத்துவமனையில் மது போதையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story