குடியுரிமைச் சான்று ஒப்படைப்பு போராட்டம்

குடியுரிமைச் சான்று ஒப்படைப்பு போராட்டம்
X
சீருடை அணிந்த பள்ளிக் குழந்தைகளுடன் கிராம மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியுரிமைச் சான்று ஒப்படைப்பு போராட்டம்
திண்டுக்கல் வடமதுரை தாலுகா அய்யலூர் வனப்பகுதியில் கிராம மக்கள் செல்லும் மாமுல் பாதையை குழிப்பறித்து செல்ல வனத்துறையினர் தடை விதித்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தேவாங்குகள் சரணாலயம் இந்த வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழும் தேவாங்குகளுக்கு கிராம மக்களால் எந்த தொந்தரவும் இல்லை. அதேபோல் தேவாங்குகளும் மக்களுக்கு எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. தேவாங்குகளை தெய்வங்களாக பாவித்து கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் சரணாலயம் அமைந்துள்ளதால் தற்போது வனத்துறையினர் கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையையும், பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையையும் குழி தோண்டி தடை விதித்துள்ளனர். இதனால் பெரிதும் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வனத்துறையினர் மாமூலாக செல்லும் பாதையில் வெட்டிய குழிகளை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி சீருடை அணிந்து பள்ளி மாணவர்களுடன் தங்கள் குடியுரிமை அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க கையில் ஏந்தியவாறும், குடியுரிமை ஒப்படைப்பு போராட்டம் என்ற பதாதைகளை கையில் ஏந்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.
Next Story