மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டதை ஆய்வு

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்துவதற்காக பெங்களூர் பாரத் மின்னணு நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 100 கட்டுப்பாட்டு இயந்திரம் (Control Unit) 120 வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் (VVPAT) பாதுகாப்பாக
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் ந.மிருணாளனி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்துவதற்காக பெங்களூர் பாரத் மின்னணு நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 100 கட்டுப்பாட்டு இயந்திரம் (Control Unit) 120 வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் (VVPAT) பாதுகாப்பாக பெரம்பலூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டதை ஆய்வு செய்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு திறக்கப்பட்டது. பின்னர் ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் கண்காணிப்பு கேமரா செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது வைத்தியநாதன் தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அருளானந்தம் பெரம்பலூர் வட்டாட்சியர் திரு.பாலசுப்பிரமணியன் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story