செஞ்சி போட்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்

X
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டையை சில நாட்களுக்கு முன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய மரபு சின்னமாக அறிவித்தது. இதையடுத்து செஞ்சி கோட்டை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர்.இந்நிலையில் பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று மதியம் 12:00 மணியாளவில் செஞ்சி கோட்டைக்கு வருகை தந்தார். முதலில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தீபாராதனை காட்டினார். பின், ராஜகிரி கோட்டையின் வரைபடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து கல்யாண மஹால், தர்பார், படைவீரர்கள் குடியிருப்பு, உடற்பயிற்சி கூடம், வெடி மருந்து கிடங்கு, நெற்களஞ்சியம் ஆகியவற்றை பார்வையிட்டார். வரலாற்று ஆய்வாளர்களிடம் கோட்டையின் வரலாற்றை கேட்டறிந்தார்.அப்போது சிவக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., கணேஷ்குமார், மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன்
Next Story

