அரிவாளுடன் தரையில் உரசியபடி உலா வந்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது

அரிவாளுடன் தரையில் உரசியபடி உலா வந்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது
X
நத்தம் பேருந்து நிலையத்தில் அரிவாளுடன் தரையில் உரசியபடி உலா வந்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது
திண்டுக்கல் நத்தம் பேருந்து நிலையத்தில் அரிவாளுடன் தரையில் உரசியபடி உலா வந்து கடைக்காரர்களையும் மிரட்டி குட்டூரை சேர்ந்த ராஜாவிடம் அரிவாளை காட்டி மிரட்டி 2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு சென்ற ரபீக்ராஜா(29) என்பவரை நத்தம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது திருட்டு, கொள்ளை, கஞ்சாவிற்பனை, வணிக நிறுவனங்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரபிக்ராஜாவின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு எஸ்.பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சரவணன் குண்டர் சட்டத்தின் கீழ் ரபீக்ராஜாவை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நத்தம் போலீசார் ரபீக்ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story