போளூர் ரோட்டரி சங்கம் புதிய தலைவர் பொறுப்பேற்கும் விழா.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரோட்டரி சங்கம் சார்பில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆளுநர் சுரேஷ் மற்றும் உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜன் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். போளூர் லாட்டரி சங்கம் சார்பில் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதிய தலைவராக சதாம் உசேன் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அதனை தொடர்ந்து செயலாளராக தவனேஷ், பொருளாளராக சான்கியான் பொறுப்பேற்று கொண்டனர். பொறுப்பேற்றுக்கொண்ட புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story




