பள்ளியில் காலை உணவு திட்டம்: அமைச்சர் பி.கீதா ஜீவன் திடீர் ஆய்வு

பள்ளியில் காலை உணவு திட்டம்: அமைச்சர் பி.கீதா ஜீவன் திடீர் ஆய்வு
X
தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து அமைச்சர் கீதா ஜீவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் நகரப்புறத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த 26 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புறத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலை உணவு திட்டம் இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாட்டு அதிபர்கள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் சுப்பையா வித்யாலயம் தொடக்கப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார், தொடர்ந்து காலை உணவை பள்ளி மாணவ மாணவியருக்கு பரிமாறினார் மேலும் அங்குள்ள சமையலறையையும் பார்வையிட்டு ஆய்வு கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் மாணவ மாணவியரிடம் உணவு எப்படி உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் சரியான நேரத்தில் மாணவ மாணவிகளுக்கு உணவுகள் வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது திமுக மாநகரச் செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏசி செந்தில்குமார், சுகாதாரக் குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், திமுக வட்டச் செயலாளர் கதிரேசன், திமுக மாநகர இளைஞரணி செயலாளர் அருண், மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Next Story