கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு!

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு!
X
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 12 RDX வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் தீவிர சோதனை.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் “12 ஆர் டி எக்ஸ் வெடிகுண்டு வெடிக்கும்” என மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் தகவலின்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவியுடன் விரைந்து வந்து, நுழைவாயில்கள், வாகன நிறுத்துமிடம், புதிய 4 மாடி கட்டிடம், பழைய கட்டிட அலுவலக அறைகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டும் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இன்று மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story