டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி சிறைபிடிப்பு பல்லடம் அருகே பரபரப்பு

பல்லடத்தில் டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி சிறைபிடிப்பு காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அணுப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஜே ஜே நகர் பகுதியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான குட்டை ஒன்றில் கோவையிலிருந்து குப்பைகள் லாரிகள் மூலமாக மாத கணக்கில் கொட்டப்பட்டு வந்ததாகவும் அதனை தொடர்ந்து நல்லிறவில் கொட்ட வந்த லாரி மண்ணுக்குள் சிக்கியதால் அதை மீட்க வந்த ஜேசிபி உடன் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறை பிடித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சுமார் 200க்கும் மேற்பட்ட இப்பகுதியில் குடியிருப்பு வாசிகள் இருக்கும் அருகிலேயே மக்காத குப்பைகள் மற்றும் துர்நாற்றம் வீசக்கூடிய குப்பைகளை கொண்டு வந்து கொட்டப்படுவதால் பல்வேறு உடல் உபாதைகளும் கால்நடைகளும் பாதிக்கப்படுவதாகவும் இதனை தொடர்ந்து நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்திற்கு ஏற்ற பூமியாக இல்லாமல் நிலமும் கெட்டுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story