ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை !
கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே தண்டவாளம் காரணமாக பொதுமக்கள் தினசரி சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அங்கு மேம்பாலம் கட்ட அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 2011-ஆம் ஆண்டு 26 கோடி 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டும், பின்னர் 2021-இல் அரசாணை ரத்து செய்யப்பட்டதால் மேம்பாலம் அமலுக்கு வரவில்லை. இதையடுத்து பொதுமக்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் துணை ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்கள் சிரமங்களை எடுத்துரைத்தனர். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், உரிய நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் மேம்பாலம் கட்டப்படும் என்றும், அதுவரை ராமச்சந்திரா சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story



