விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

X
கோவில் மற்றும் மயானத்தை மறித்து சுவர் கட்டப்படுவதை கண்டித்து கோவில்பட்டி தாலுகா அலுவலக முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் வடக்கு தெருவில் குடியிருந்து வரும் தலித் சமூக மக்களின் கழு மாடசாமி திருக்கோவில் மற்றும் அங்குள்ள மயானம் ஆகியவற்றை மறித்து தனி நபர் சுவர் எழுப்பி வருவதாகவும், அந்தச் சுவர் தீண்டாமை சுவர் என்றும், அந்த சுவர் கட்டும் பணியை தடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் விமல் வங்காளியார் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் தாசில்தார் பாலசுப்பிரமணியனிடம் வழங்கினர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் பாலசுப்பிரமணியன் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
Next Story

