சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது கார் மோதி விபத்து!

சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது கார் மோதி விபத்து!
X
கோவில்பட்டியில் அதிவேகமாக வந்த கார் போக்குவரத்து சிக்கனல் நின்று கொண்டிருந்த வாகனம் மோதியதில் அடுத்தடுத்து நின்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
கோவில்பட்டியில் அதிவேகமாக வந்த கார் போக்குவரத்து சிக்கனல் நின்று கொண்டிருந்த வாகனம் மோதியதில் அடுத்தடுத்து நின்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் அதிக போக்குவரத்து உள்ள இடங்களில் ஒன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதி. எப்போதும் இந்த பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் சென்று வரும். இந்நிலையில் எட்டயபுரம் சாலையில் இன்று அதிவேகமாக வந்த கார் ஒன்று வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அடுத்துள்ள தனியார் மண்டபம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து தடுப்பினை தூக்கி வீசியது மேலும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோதியது. இதனால் அங்கு நின்றிருந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் 3 கார்கள், 2 லோடு ஆட்டோக்களுக்கு லேசான சேதம் ஏற்பட்டது. அதி வேகமாக வந்த கார் மோதியதில் போக்குவரத்து சிக்னலில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story