பனிமய மாதா ஆலயம் அருகில் கால்வாய் பணிகள் : அமைச்சர் ஆய்வு

X
தூத்துக்குடி மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட பனிமய மாதா பேராலயத்திற்கு பின்புறம் உள்ள தஸ்நேவிஸ் பள்ளிக்கு அருகே கழிவு நீர் கால்வாய் கட்டமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கால்வாய் அமைக்கும் பணியை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் சேசையா, வட்டச் செயலாளர் டென்சிங், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மகளிர் அணி கமலி, வட்டப் பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர். ஃ
Next Story

