கரூர் எம் குமாரசாமி கல்வியல் கல்லூரியில் திருக்குறள் முற்றோதல் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

 கரூர் எம் குமாரசாமி கல்வியல் கல்லூரியில் திருக்குறள் முற்றோதல் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் எம் குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் திருக்குறள் முற்றோதல் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.      கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பாட்டுரை பாவலர் இறையரசனார் நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் எம். குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் திருக்குறள் முற்றோதல் சாதனை நிகழ்ச்சி கல்லூரியின் தாளாளர் மோகனரங்கன்  தலைமை நடைபெற்றது. இந்நிகழ்வில் செயலாளர் பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வர் முனைவர்.ராமசுப்பிரமணியன்  குறள் கற்போம்! குறள்வழி நடப்போம்! குறளாள் இணைவோம்! என்று திருக்குறளின் மகத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். இதில் மாணவ மாணவிகள் அனைவரும் 1330 திருக்குறளையும் வாசித்து பொருள் உணர்ந்து சாதனை படைத்தனர். . பாவலர் இறையரசனார் நினைவு அறக்கட்டளை தலைவர் சிங்கப்பூர் இறை.மதியழகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திருக்குறள் முற்றோதல் வாசித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசாக தலா 1330 ரூபாயும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.      தொடர்ந்து திருக்குறளை பொருளுணர்ந்து படித்து இயன்றவரை மனனம் செய்து கொள்ளவும், பயன்படுத்தவும் முயற்சி செய்வேன் என்று அனைவரும் உளமாற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாணவ மாணவிகள் அனைவருக்கும் இந்த நிகழ்வு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. கல்லூரியின் முதல்வர் முனைவர்.பி.சாந்தி வரவேற்றார். உதவி பேராசிரியர் ஜெகதீசன் நன்றியுரை வழங்கினார்.
Next Story