காவல்துறையினருக்கு அரசால் வழங்கப்பட்ட வாகனம்

X
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக அரசால் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்ட 8 புதிய பொலிரோ வாகனங்கள் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு வழங்கும் விழா மாவட்ட எஸ்பி.பிரதீப் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சைபர் கிரைம் ADSP.தெய்வம், நகர் DSP.கார்த்திக், நிலக்கோட்டை DSP. செந்தில்குமார், பழனி DSP. தனஞ்செயன், ஒட்டன்சத்திரம் DSP. கார்த்திகேயன், திண்டுக்கல் ஆயுதப்படை DSP. ஆனந்தராஜ் உள்ளிட்டோரிடம் வாகனத்தின் சாவி வழங்கி கொடியசைத்து வாகனங்களை வழங்கினார். இந்நிகழ்வில் தனிப்பிரிவு ஆய்வாளர் பாஸ்டின் தினகரன், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் நவீன், நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

