சந்திர கிரகணம். கோயில் நடை அடைப்பு

சந்திர கிரகணம். கோயில் நடை அடைப்பு
X
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை அடைப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது
சந்திரகிரகணம் 07.09.2025ம் தேதி ஆவணி மாதம் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 09.57 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 01.26 மணிக்கு முடிவடைகிறது. எனவே அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மற்றும் அதனை சார்ந்த உபகோயில்களில் அன்று மத்திம கால தீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு ஆகியவை பகல் 11.41 மணிக்கு நடைபெறும். அன்று மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது. எனவே மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை. அடுத்த நாள் (08.09.2025) வழக்கம் போல் தரிசனம் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story