திருப்பூர், ரயில் நிலையம் அருகே அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர், ரயில் நிலையம் அருகே அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
X
திருப்பூர்,ரயில் நிலையம் அருகே அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் ரயி்நிலையம் அருகே அமெரிக்க வரி விதிப்புக்கு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்க அரசின் 50 சதவீத வரி விதிப்பால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள திருப்பூர் பனியன் தொழில் மற்றும் பல்வேறு தொழில் நகரங்களையும் கண்டு கொள்ளாமல் கைவிட்ட மத்திய பாஜக அரசை கண்டித்தும் உடனடி நிவாரண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக ஆ.ராசா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா, செந்தில் பாலாஜி, திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர்  கே.வி.தங்கபாலு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், எம்.பி சுப்பராயன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது அபுபக்கர், மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தங்கவேல், தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், ஆதித்தமிழர் பேரவை அதியமான்,திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்,திருப்பூர் மாநகராட்சியின் 4- வது மண்டல தலைவர் இல.பத்மநாபன்,திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மற்றும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று ஆர்பாட்டம்  நடைபெற்றது. மேலும் மோடி பாதி டிரம்ப் மீதி முகமூடி அணிந்து திகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
Next Story