ஓசூர் அருகே ஏரியை தூய்மைப்படுத்த கோரி பொதுமக்கள் போராட்டம்.

ஓசூர் அருகே ஏரியை தூய்மைப்படுத்த கோரி பொதுமக்கள் போராட்டம்.
X
ஓசூர் அருகே ஏரியை தூய்மைப்படுத்த கோரி பொதுமக்கள் போராட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 1-வது வார்டு பகுதியில் உள்ள உப்கார் ராயல் கார்டன் அருகே தாயப்பா ஏரியில் அந்த பகுதியில் இருக்கும் சிப்காட் பகுதியில் உள்ள சிறு நிறுவனங்களிலிருந்து வெளி ஏற்றப்படும் ரசாயன கழிவுகள் இந்த ஏரிக்கு வருகிறது. இதன் காரணமாக, ஏரியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் கழிவு குப்பைகள் கொட்டப்படுவதால் ஏரி மாசு அடைந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் ஏரியை தூய் மைப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story