சுரூர்-ரயில்வே அமைச்சகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

சுரூர்-ரயில்வே அமைச்சகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
சுரூர்-ரயில்வே அமைச்சகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். டி ஆர் இ யூ மத்திய சங்கம் சி ஐ டி யு சார்பில் ரயில்வே அமைச்சகத்தை கண்டித்து கிளைகள் தோறும் இன்றும் நாளையும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கரூர் ரயில்வே சந்திப்பு நிலையம் முன்பு டி ஆர் யு கரூர் கிளை செயலாளர் நல்லமுத்து தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, டி ஆர் இ யூ சேலம் கோட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது 2024-25ம் நிதியாண்டில் ரயில்வேயில் பயணிகள் போக்குவரத்து வருவாய் 75,239- கோடி எனவும், சரக்கு போக்குவரத்து வருவாய் 1,75,302 கோடி.ஒட்டுமொத்த வருவாய் 2.65 லட்சம் கோடியாக உயர்ந்த பின்பும், பல ஆண்டுகளாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் ரூ 7000 என்ற உச்சவ வரம்பின் அடிப்படையில் வழங்குவது நீதி அல்ல என்றும் இதனை ரத்து செய்து உயர்ந்த வருவாய்க்கு ஏற்ப ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story