மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு  பாராட்டு விழா நடைபெற்றது
X
முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2025ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வில் , தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு தமிழ் சிந்தனைப் பேரவையின் தலைவர் தமிழறிஞர் ரமேஷ் குமார் அவர்கள் தனித்தமிழை தயக்கமின்றி பேசுவோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி மாணவியருடன் கலந்துரையாடி விருதுகள் வழங்கி சிறப்பித்தார். விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார்.. உலக சமாதான மகரிஷி சேவா அறக்கட்டளை தலைவர் முகுந்தன் முரளி அவர்கள் வாழ்த்துரை வழங்கி பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். சமூக ஆர்வலர் நாகராஜன் வாழ்த்துரை வழங்கி ,கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் இளம்பிள்ளை ஸ்ரீ சௌரிராஜன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அழகர்சாமி வாழ்த்துரை வழங்கினர். தமிழ் ஆசிரியர் திவ்யா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ் ஆசிரியர் லதா அவர்கள் நன்றி கூறினார். விழாவில் மாணவியர், பெற்றோர், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story