நிதி நிறுவனத்தில் பெண் திடீர் தர்ணா

நிதி நிறுவனத்தில் பெண் திடீர் தர்ணா
X
அருமனை
குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்தவர் அருள் கிறிஸ்டோபர் மனைவி ஜீனா (42). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 4 கிராம் நகையை அடகு வைத்திருந்தார். நகையை மீட்க சென்ற போது நகை இல்லையென நிதி நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இது குறித்து ஜீனா அருமனை  காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று ஜீனா நிறுவனத்திற்கு சென்று நகையை திருப்பி தர கேட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டார். அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, வருகிற வியாழ கிழமை  நகையை திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளித்தனர்.
Next Story