காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவி மாயம்

காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவி மாயம்
X
நாகர்கோவில்
குமரி மாவட்டம்  ஈத்தாமொழி அருகே உள்ள மங்காவிளை பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவர் குளச்சல் பகுதியில் தனியார் கல்லூரியில் பி ஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவ தினம்  வீட்டில் இருந்து திடீரென மாயமானார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்து தகவல் கிடைக்காததால்,  அவரது தந்தை ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தனது மகள் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், மகளிடம் தற்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு கூறியதால் சரியாக தன்னிடம் பேசாமல் இருந்து வந்ததாகவும், தற்போது திடீரென மாயமாகிவிட்டதாகவும் புகாரில் கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story