விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆட்சியர்

முதலமைச்சர் கோப்பையை களத்தில் இறங்கி விளையாடி விளையாட்டுப் மாணவர்களை உற்சாகப்படுத்தி போட்டிகளில் பிள்ளையார் சுழி போட்டு வைத்த ஆட்சியில்
பெரம்பலூர் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்டம், பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று (02.09.2025) நேரில் பார்வையிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலோடு “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை“ விளையாட்டுப் போட்டிகள் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பலுார் மவாட்டத்தில் இப்போட்டிகளில் கலந்துகொள்ள https://sdat.tn.gov.in இணையதளம் வாயிலாக 22,140 வீரர் - வீராங்கணைகள் முன்பதிவு செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 26.08.2025 அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் 10.09.2025 அன்றுடன் நிறைவுபெறவுள்ளது. மேலும், 5வது நாளாக இன்று (02.09.2025) நடைபெற்றுவரும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கோ - கோ (பெண்கள்), கோ - கோ (ஆண்கள்), கையுந்து பந்து, கபடி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, தடகளம் ஆகிய போட்டிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், விளையாட்டு வீரர், வீராங்கணைகளிடம் அனைவரும், பாதுகாப்புடன் விளையாட வேண்டும் என்றும், தங்களது திறமைகளை காண்பித்து, போட்டியில் வெற்றிபெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று கூறி போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 1,747 நபர்கள் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். அதனைத்தொடர்ந்து, பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், விளையாட்டு வீரர்களுக்கு ஆர்வமுள்ள விளையாட்டுக்களை கண்டறிந்து அதற்கு முழுவீச்சில் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், விளையாட்டு வீரர்களுக்கு சத்தான உணவு வகைகளை வழங்க வேண்டும் எனவும், விடுதியினை தூய்மையாக பராமரிக்க விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்திட வேண்டும் எனவும் மாவட்ட விளையாட்டு நல அலுவலர் அவர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பொற்கொடி வாசுதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story